கதாநாயகன் வேஷத்திற்கு ஆசைப்படும் கோமாளி ஜனா.

" முள்ளிவாய்க்காலோடு   எல்லாப் புலிகளும் தொலைந்து விட்டார்கள்,வரலாறு தெரிந்த முன்னாள் புலிகள் எவருமே இந்த உலகத்தில் எந்த மூலையிலும் இல்லை  இனி  நாங்கள் சொல்வதே வரலாறு பிரபாகரனுக்கும் சுடப் பழக்கியது நான் தான் என்று சொன்னாலும் உலகம் அதை ஏற்கத்தான் வேண்டும்"   

இப்படி சண் . தவராஜா போன்ற சில ஊடகவியலாளர்களும் ஜனா போன்ற அரசியல் வாதிகளும் எண்ணுகின்றனர்  

" 1985 நடுப்பகுதியில் சுதுமலை மானிப்பாயில் விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு உட்பட பல தளபதிகள் தங்கியிருந்த முகாம்  இராணுவத்தின் சுற்றி வளைக்கப்பட்ட போது விடுதலைப் புலிகள் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் இன்றி மூன்று முனைகளில் தாக்கித் தகர்த்த ரெலோவின் அணிகளில் ஒன்றில் முக்கிய போராளியாகச் செயற்பட்டவன் நான்“    

 -- கேள்விச்  செவியன் ஊரைக் கெடுத்தான் என்று சொல்வார்கள். 

விடுதலைப் புலிகளின் முதலாவது மேஜர் அல்பேட் ( கந்தையா .ரூப நிதி ) வீரசசாவடைந்தது இந்த சுதுமலை முற்றுகை முறியடிப்பு தாக்குதலின் போதுதான்.  

இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த சண்டைக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் .
" RAID,  on  entebbe" பாணியில் மோசட் வகுத்த திட்டப்படியே சுதுமலை முற்றுகை இடம்பெற்றது  கெலி கொப்டரில் வந்த படையினரே இந்த முற்றுகையில் ஈடுபட்டனர் .     
 

கிட்டு தலைமையில் இத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது .

அன்று GPMG.ஆயுதத்தின் சக்தியை ஸ்ரீ லங்கா படையினருக்கு உணர்த்தினர் புலிகள் .
கிட்டத்தட்ட இத் தாக்குதல் முடிவுறும் கட்டத்தில் யாழ் நகரிலிருந்து ஓடிவந்த பாரூக் தலைமையிலான விடுதலைப் புலிகளின் முஸ்லிம் போராளி அணியும்,  டெலொவினரும் அங்கு வந்து சேர்ந்தனர் .     
வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் அங்கு வந்த டெலொவினருக்கு புலிகள் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டனர் . 

ஆனால் தாமே கிட்டுவை காப்பாற்றியதாகவும் விடுதலைப் புலிகள் யாருக்கும் எந்த உயிர் சேதமும் இல்லை என்று கூறுவதும் வரலாறு தெரியாததின் வெளிப்பாடே .   

  

சுதுமலை முற்றுகையின் பின் அந்த முகாமை விட்டு வெளியேற புலிகள் தீர்மானித்தனர் . அச்சமயத்தில்  " உங்கள் வீரத்தை நாங்கள் கண் ஊடக கண்டோம் தயவு செய்து எங்கள் கிராமத்தை விட்டு பிரிந்து செல்லாதீர்கள்“ என  துண்டு பிரசுரத்தை அச்சிட்டு சுதுமலை மக்கள் விநியோகித்தார்கள் எந்த ஒரு விடுதலை இயக்கத்திற்கும் கிடைக்காத கௌரவம் இது . இதிலிருந்தே இந்த சண்டையின் கதாநாயகன் கிட்டு வா ஜனா வா என்பது புரியும் .

இந்த தாக்குதல் நடந்தது 21/12/1985 இவரோ 1985 நடுப்பகுதி என்கிறார் .இயக்கங்கள் புரிந்துணர்வுடன் செயல்பட்ட முதலாவது சம்பவம் என இது வர்ணிக்கப்பட்டது .இது தொடர்பாக பலரும் எழுதினார்கள் .
ஆனால் இவரோ 09/01/1985 அன்று நடைபெற்ற பண்டிதரின் முற்றுகையின் போது விடுதலைப் புலிகளை காப்பாற்றியதாகக் கூறுகிறார்.   

அடுத்து இயக்க மோதல்களில் உயிர் இழப்பு ஏற்படுவது என்பது வேறு இந்திய இராணுவ காலங்களிலும் 1990 இருந்து ஸ்ரீ லங்கா அரசின் ஒட்டுக்குழுக்களில் ஒன்றாக இருந்து செயல் பட்ட போதும் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் வேறு இரண்டையும் ஒன்றாகக் காட்ட முனைவது மிக மோசடியான செயல் ஏனெனில் புலிகள் எப்போதுமே சொந்தப் பலத்துடன் தான் மோதினார்கள் அடுத்தவர்களின் துணையுடன் அல்ல .   

இவர் இங்கிலாந்தின் liverpool. நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் "பய "பக்தியுடன் வழிபாடு செய்துகொண்டிருந்தார் .அச்சமயம் இவரது ஊரைச் சேர்ந்தவர்கள் கொலைகாரன் எப்படி சாமி கும்பிடிகிறான் என இவருக்கு கேட்க கூடியதாக கூறினார்கள். 

இவ்வாறாக இவர் கொலைக்காரர் என்பது உலகப் பிரசித்தமான  செய்தி .

அதுவும் விஜி என்ற உயர்தர வகுப்பு மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் படுகொலையாளர்களுக்கு புலிகள் சாவுத் தண்டனை வழங்கியதையும் மோதலாக காட்டுவது மோசமான செயல் .

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆரையம்பதியில் கலா என்ற மாவீரர் வீட்டுக்கு சென்றார் இவர் . இந்தியப் படையினருடன் இவர் இணைந்து செயல் பட்ட காலத்தில் இவரால் வெட்டி கொல்லப்பட்டவரே கலா . ஆகையால் கலாவின் மருமகனும் ஏனைய உறவினர்களும் இவர்களை விரட்டியதை ஆரையம்பதி மக்கள் கண்டனர் . 

 

   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரை நாவுறுக்காக கட்டப்பட்ட அல்லது போட்டுடைக்கும் பூசணிக் காய்யானர் இவர் .

இந்த இலட்சணத்தில் தமிழ் தேசியத்தைக் புரிந்தவர் தான்தான் என்று நினைப்பு வேறு. இவரைப் போன்றவர்களை வேட்பாளர்களாக நிறுத்திய அவலத்தை கண்டுதான் தகுதியானார்களுக்கு வாக்களிக்கும் படி வடக்கு முதல்வர் .கூறினார் .      

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது ஜனா , இரா ,துரைரத்தினம் போன்றவர்கள் உள்வாங்கப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகின்றோம் .  

வரலாற்றில் கற்பனைகளுக்கு இடமில்லை என்பது மீண்டும் நினைவு படுத்துகின்றோம்

அருணன்

இன்று தமிழன்"அரசியலுக்கு சட்டம் படித்தவர்கள் தான் சாதிப்பார்கள் "என்பது முட்டாள்தனம்

Read More