புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம் -16 நிராஜ் டேவிட்

உண்மையில் கருணா என்கிற முரளிதரன் போன்ற எமது இனத்தில் பிறந்து அதே பிதேசவாத கருத்துடன் கூடிய நிறைய பிதேசவாதிகள் தற்பொழுது களைகட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 

இது தமிழினத்தில் தோன்றிய அனேகமானவர்களிடம் தற்பொழுது தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

உதாரணமாக எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் எமது இன விடுதலைக்கான தனது போராட்டத்தை ஆரம்பித்த பொழுது சிங்கள அரக்கர்படைகளின் இன அடக்குமுறைக்கு எதிராக போராடியது மட்டுமல்லாமல் சம நேரத்தில் எமது இனத்துக்குள் தோன்றியிருந்த அனைத்துவிதமான பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு உறுதியான மாசற்ற தலைவன் என்பதையும் நாம் கூறியாகவேண்டும்.

மேலும் அவருடைய வருகைக்குப் பின்புதான் தமிழர்களுக்குள் இருந்த சாதி,சமயம்,மற்றும் பிரதேசவாதம் போன்ற கொடிய பிரிவினைகள் அடக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பொதுவான ஒற்றுமையை வளர்த்து அனைத்து பிரிவினைகளையும் ஓரங்கட்டியிருந்தார். 

ஆனால் இந்த பிரிவினை நோய்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேதான் 100வீதம் ஒழிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன அழிப்பு என்றால் என்ன பாகம் 1

Read More