புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம் -17 நிராஜ் டேவிட்

(தூயவன்) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் சமநேரத்தில் இந்த பிரதேசவாதப் பிரிவினைகளுக்கு உடன்படாமல் அனைத்தும் நூறுவீதம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

மேலும் கருணா என்கிற பிரதேசவாதியாலும் இந்த கொள்கை அன்று கடைப்பிடிக்கப் பட்டதால்தான் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என்கிற பிரிவினை தலைதூக்க ஆரம்பித்ததென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் இந்த தீய பிரிவினைகள் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டதன் விளைவே அவர்களின் படைபலம் பெருகுவதற்கும்,மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் இன்னும் போராளிகளிடத்தில் ஒற்றுமையையும், மக்களிடத்தில் சந்தோசத்தையும் ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த பிரிவினையாளர்களும் ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவெனில்,தமிழீழத்தின் தென் துருவமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் மட்டும் பிதேசவாதம் ஒன்று மட்டுமே மிகப்பெரிய அளவில் இன்று வரை பேணப்பட்டு வருகின்றதென்பதும் ஏனைய சாதி,சமயம், அந்தஸ்த்து போன்ற பிரிவினைகள் அங்கு முக்கியத்துவம் அற்றுள்ளதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்’

ஆனால் தமிழீழத்தின் வடதுருவமான அதன் எல்லைக்குள் உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சாதி,மற்றும் அந்தஸ்து போன்ற பிரிவினைகளே அங்கு பலமாக இன்றுவரை உள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம் -17 நிராஜ் டேவிட்

Read More