மட்டு வாழ் மக்களால் என்றைக்குமே மறந்துவிட முடியாத செப்டெம்பர் படுகொலை(காணொளி)

பெண்கள்,சிறுவர்கள்,குடும்பஸ்தர்கள் என்ற பேதம் எதுவுமில்லாமல் ஸ்ரீ லங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட இந்த தமிழ் உறவுகள் பற்றிய நினைவுகள் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து என்றைக்குமே மறந்துவிட  மாட்டாது

 

1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி , 23 ஆம் திகதி வரையான காலப்பகுதி ; இந்த இரண்டு வார காலப்பகுதியில்  ஸ்ரீ லங்கா படையினர் மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோர தாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேச வாழ் மக்களால் என்றைக்குமே மறந்துவிடமுடியாது. 


செப்டெம்பர் படுகொலை என்றும் தமிழின உயிர்க்கொலை நாளென்றும் மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும் அச்சத்துடனும் நீண்ட காலம் நினைவுகூரப்பட்டு வந்த இந்த நாட்களில் மாத்திரம் சுமார்  700 ற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை  செய்யப்பட்டார்கள்.

.1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து  மட்டக்களப்புத்  தமிழ் மக்கள்  மீது அழித்தொழிப்பு யுத்தம் ஒன்றை ஸ்ரீ லங்கா படையினர்  கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.  அந்தக் கால கட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு படுகொலைகளை ஒரு போரியல் யுக்தியாகவே ஸ்ரீ லங்கா இராணுவம் மேற்கொண்டு வந்தது.

 

மட்டு வாழ் மக்களால் என்றைக்குமே மறந்துவிட முடியாத செப்டெம்பர் படுகொலை(காணொளி)

Read More