கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ! (அங்கம்:1)

ஒரு காணியில் பட்டமரமொன்று இருந்தது . அது ஒருநாள் முறிந்து வீழ்ந்தது. காணிச்   சொந்தக்காரன்  உடனே அவ்விடத்துக்கு விரைந்தான் . முறிந்த மரத்தின் பொந்தொன்றில் இரு கிளிக்குஞ்சுகள் இருப்பதைக் கண்டான். அவற்றை ஆசையுடன் வளர்த்து வந்தான். ஒருநாள் அவனது வீட்டுக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவரை நன்கு உபசரித்த அவன் தனது கிளிக்குஞ்சுகளில் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினான். சில நாட்கள் செல்ல ஒரு துஷ்டன் அவனது வீட்டுக்கு வந்தான். அங்கிருந்த மற்ற  கிளி க்குஞ்சை எவரிடமும் கேட்காமல் பிடித்தான். காணிச் சொந்தக்காரனின் மனைவி தடுத்தாள் அவளை மிரட்டினான் துஷ்டன் கிழிக்குஞ்சுடன் வெளியே செல்ல முயன்ற துஷ்டனைக்  காணிச் சொந்தக்காரன் கண்டான். " நான் ஆசையுடன்  வளர்த்த கிளி இதனை த் திருப்பிக்  கொடுத்துவிடு“ என துஷ்டனிடம்  வேண்டினான்." பேசாமல் -போ கிளியைக்  கேட்டால் முகத்தை உடைப்பேன்“  எனத் துஷ்டன் மிரட்டினான். எனவே அவன் பயந்து துஷ்டனுக்கு வழிவிட்டான்.


சிலகாலம் செல்ல இக்குஞ்சுகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு வந்தது. முனிவரின் தவச் சாலைக்குச்  சென்றான். அவன் முனிவருக்கு வழங்கிய கிளிக்குஞ்சு மெல்ல அவன் அருகில் வந்தது . அது நன்றாக வளர்ந்திருப்பதை கண்டு அவன் மனம் மகிழ்ந்தான். " வணக்கம்! வாருங்கள் !!அமருங்கள் !!! பழம் சாப்பிடுங்கள் " என்று உபசரித்தது கிளி. அதைத் தடவிக் கொடுத்துவிட்டுத் திருப்தியுடன் விடை பெற்றான் அவன்.  

துஷ்டன் கொண்டுசென்ற கிளியையும்  பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. எனவே அடுத்த நாள் துஷ்டனின் வீட்டுக்குச் சென்றான். அங்கே  ஒரு கூட்டுக்குள் அந்தக்கிளி இருந்தது. அவனைக் கண்டதும் கிளி. " அடியடா இவனை , கொல்லடா இந்த நாயை " என்று சத்தமிட்டது. அப்போது துஷ்டன் ஒரு தடியுடன் வந்தான். "கிளியைக் கொண்டுபோகவா பார்த்தாய்" என்று கேட்டு அவனது முதுகில் அடித்தான். "வேதனையுடன் இல்லை கிளியைப்  பார்க்கத்தான் வந்தேன் " என்று  கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
தனது வீட்டுக்குச் சென்ற அவன் தனது மனைவியிடம் நடந்ததைக் கூறினான். அவள் " இரு குஞ்சுகளும் ஒரு தாயிடமிருந்து வந்தவையே. இரண்டின் பழக்க வழக்கங்களும் எதிர் மாறாக இருக்கின்றன. இதற்குக் காரணம் அவற்றின் வளர்ப்பு முறையே. வளர்ப்பு முறையில் கோளாறு இருந்தால் பின்னர் எவ்வளவு முயன்றாலும் அதனைத் திருத்த முடியாது“ என்றாள்.


வளர்ப்பு முறை தொடர்பான விடயம் பத்திரிகையாளர்களிடமும் தெரியும்.தமிழ்த் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய பத்திரிகையாளர்களிடம் அதை வெளிப்படையாகக்  காணமுடியும். ஆனால் அவற்றைக் கொச்சைப்படுத்தும் லேக்ஹவுஸின் " தினகரன் " போன்ற பத்திரிகைகளில் தமது ஊடக அரிச்சுவடியைப் பயின்றவர்களிடம் அதைக் காணமுடியாது. காலத்துக்குக்  காலம் ஆட்சியில் அமரும் கட்சிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே இவர்களின் தலையாய பணியாக இருக்கும். ஆனால் எக்காலத்திலும் தமிழ்த் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்துவதை மட்டும்   இவர்கள் நிறுத்த மாட்டார்கள். இவர்கள் தமிழினத்தின் வாழ் நாள் சோதனையாளர்கள். இவ்வாறான சோதனையாளர்கள் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிக் கௌரவித்தமை மிகவும் கேலிக்கிடமானது.

1.காட்டிக்கொடுத்தான் மட்டக்களப்பான் , கழுத்தறுத்தான் மலையகத்தான்!
2. நாறிக்கிடக்கும் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை நகரசபை !
3. நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பி வெளியேற்றம் பெண்கள் சோகம் ஆண்கள் நிம்மதி. ( December.8. 2013 )  
4.ஐரோப்பா நாடுகளில் வாள் வெட்டுகளுடன் ஆரம்பமாயிருக்கும் மாவீரர் வாரம் (26.11.2016.)
5. பொட்டன் ஓட்டம் -தமிழ்க்கவி தகவல் (23 /01 /2014.)  

இவ்வாறான தலைப்புக்களைப் போட்டவர்  லேக்ஹவுஸ்  என்ற முட்டையிலிருந்து வெளிவந்த ஒரு  ஊடகக்குஞ்சு இவருக்குத்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது.
பாலுக்குள் தண்ணீரைக் கலந்தால் அன்னம் தண்ணீரை விட்டுப் பாலை . மட்டுமே உறிஞ்சிக் குடிக்குமாம் அதற்கு நல்லதை மட்டுமே ஏற்கத் தெரியும். பன்னாடையோ, கஞ்சல், குப்பை போன்றவற்றைத் தேக்கிக்கொண்டு நல்லவற்றை வெளியே விடும். இவர் இரண்டாவது வகை . ஈ பி டி பி  வெளியேற்றம் என்பதுதான் செய்தியென்றால் அப்படியே போடுவதுதானே? பெண்கள் சோகம் ஆண்கள் நிம்மதி எனப் தலைப்பிடுகிறார் என்றால் இவரது மனதில் எவ்வளவு கஞ்சல் எண்ணங்கள் இருக்கின்றன ? தீவுப் பகுதிப் பெண்களை ஏன் கொச்சைப்படுத்தவேண்டும்?“ எந்தப் பெண் தனக்குச் சோகமாக இருக்கிறது என்று இவருக்கு தொலைபேசியில் சொன்னார்? " என ஒரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த தமிழ்க்கவி இறுதி யுத்தத்தின்போது பொட்டம்மானைத்  தான் காணவில்லையென்று சொல்லியிருந்தார். அதற்காக பொட்டன்  ஓட்டம்  என்று ஒருமையில் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும் . உண்மையில் பொட் டம் மானைக் கண்டிருந்தாலும் தமிழ்க்கவி சொல்வாரா? ரோ ,சி பி ஐ போன்ற வையெல்லாம்  துளைத்தெடுத்திருப்பார்களல்லவா?

வல்வெட்டித்துறை  நகரசபை மட்டுமல்ல காரைதீவு , வலிகிழக்கு. போன்ற பல உள்ளுராட்சிச் சபைகளிலும் குத்து வெட்டுக்கள் நடந்தன.  " நாறிக்கிடக்கும் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை நகர சபை " என்று தலைப்பிட்டால் அவர் மீது இவர் எவ்வளவு வஞ்சகம்  வைத்துள்ளார் என்பது புலனாகிறது.
  இதற்கெல்லாம் காரணம் கருணா .ஏனெனில் கருணாவின் பிரச்சி னைகளுக்குப் பின்பே இந்த மாதிரி லேக்ஹவுஸ் குஞ்சுகள் திடீர்த்  தேசியவாதிகள் ஆகினர். இவர்களுக்கெல்லாம் ஒரு குண்டைச் செலவழிக்கக் கருணாவோ, அவருடன் இணைந்து செயற்பட்ட அரச படையினரோ தயாராக இருந்திருக்க மாட்டார்கள். இன்ஸ்டன் ரீ,இன்ஸ்டன்காப்பி போல இவர் போன்றவர்கள் இன்ஸ்டன் தேசியவாதிகள் . கருணாவைச் சாட்டிக்கொண்டு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் தேடியவர்கள் தான் தம்மை தேசிய வாதிகள் என இனங் காட்டி தமிழ்தேசியக் கூட்டமைப்பின்  உருவாக்கத்துக்குத் தாங்களே அத்திவாரம்,நிலை, ஜன்னல் என நிறுவப்படாதபாடுபடுகின்றனர்.  

 "தராக்கிக்கு நான் கோவை எடுத்துக் கொடுத்தேன், குளிப்பதற்குச் சவர்க்காரம் , துவாய் எடுத்துக் கொடுத்தேன். ஆகையால் எனக்கு கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குண்டு என்ற பாணியில் இன்னும் எத்தனை பேர் கிளம்பக் போகிறார்கள்"என்று அஞ்ஞாதவாசன் என்ற பெயரில் ஜெனிவாவில் நடந்த  நிகழ்வொன்றின் போது துண்டுப் பிரசுரம் ஒன்று ஏற்கெனவே வெளியிடப்பட்டது.
அந்தப் பிரசுரத்தில் பிள்ளையா ன் வேடன்  -  கருணா  கோவணத்துடன் திரிந்தவர் என்றும் சம்பந்தன் ஐயா தூக்கிக் காட்டினார்  எனவும் இவர் கொச்சையாக எழுதிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறானவரைத் தனது  `பரமாத்தகுரு`வாக ஏற்றுக்கொண்ட சிஷ்யன் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளுக்கு பங்கே இல்லை என நிறுவ முயல்கின்றார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி  பாயுமல்லவா ? நல்ல வேளை தமிழீழ  விடுதலைப் புலிகளைப் பிரபாகரன் உருவாக்க வில்லை என்று சொல்லாமல் விட்டார்கள். அந்தளவில் புண்ணியம் தான்
வரலாறு என்பது சம்பந்தப்பட்டவர்களால் எழுதப்படுவது. அல்லது அந்தச் சம்பவங்களுடன் உணர்வு ரீதியாகப் பங்களித்தவர்கள் அவற்றைச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்துவது  (உதாரணம் - நா.யோகேந்திரநாதன்) விறாந்தையில் நின்று வந்ததை வாங்கி விழுங்கி விட்டு ஏப்பமிட்டவர்களால் எழுதப்படுவதல்ல. சுமார் 18 வருட காலம் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர்  சிலரது பெயர்களை குறிப்பிட்டு "இவர்களை நாங்கள் வாழ்க்கையில்  ஒருநாளும் கண்டதில்லையே ? நீங்கள்தான் இவர்களை பற்றி சொல்கிறீர்கள்“ என இம்முறை மாவீரர் நாள் நிகழ்வின் போது ஒருவரிடம் வினாவினார். உண்மையில் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்ட புலிகளின் உத்தியோக பூர்வ பத்திரிகையாளர் மாநாடுகளில் இவ்வாறானவர்களை அவர் கண்டதில்லை. இவர்கள் சரியாகப்  பொறுப்பாகச் செய்திகளைக் தருவார்கள் என்று எந்த ஒரு ஊடகமும் நம்பவில்லை. அதனால்தான் தமது நிறுவனத்தின் சார்பில் இவர்கள்  எவரையேனும் அனுப்பவில்லை.

கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமக்கு பங்குண்டு என்று  இவர்களும்,புலிகளுக்கு கூட் டமைப்பின் உருவாக்கத்தில் பங்கில்லை என இவர்களின் ஒருவரின் சிஷ்யனும்  நிறுவ முயல்வதன் காரணம் என்ன ?
குறிப்பாக வடக்கில் எதாவது  சம்பவங்களைச் சொல்லப்போனால் எல்லோரும் கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள். எனவே கிழக்கில் தான் தமது மகாபங்களிப்பு இருந்ததாகக் காட்ட முனைகின்றனர்.எதைச் சொன்னாலும் அவர்கள் நம்பிவிடுவார்கள் என்று எண்ணுகிறார்களா?  சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டோர் முழுமையாக ஒழிந்து போனார்கள் எஞ்சியிருப்பவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ள  முயலமாட்டார்கள்,.அவர்களுக்கு பாதுகாப்புப்  பிரச்சினை எமக்குத்தான் கருணாவின் புண்ணியத்தில் அரசியல் அடைக்கலம் கிடைத்து விட்டதே!  இனி நாம் சொல்வதுதான் வரலாறு என எண்ணுகிறார்கள் . துஷ்டனின் கையில் கையில் அகப்படட கிளி எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியாகவா எமது வரலாறு பதியப்படப் போகிறது?
அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்

தொடரும் துரொக வரலாறு (பகுதி 1 )மீள் பிரசுரம்

Read More