மட்டக்களப்பில் பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளை

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் இன்று முற்பகல் கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59 தனது வீட்டில் தனிமையில் இருந்த பொழுது (27) முற்பகல் 11.30. மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்களால் கூறிய ஆயுதத்தை காட்டி அவருடைய இரண்டு பவுண் நிறையுடைய தங்க மாலையினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

குறித்த சம்பவத்தினால் அதிர்ச்சியுற்ற குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இந்த, சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பெரும்குற்ற பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட குற்றதடவியல் பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  

  

  

  

மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் ஆய்வு நூல் குறித்த அறிமுகப் பதிவு.பேராசிரியர் சி.மௌனகுரு

Read More