வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரிவிலுள்ள வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டு மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

 பாடசாலை அதிபர் ஏ.பி.எம்.ஹைதர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜூனைட் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்pத், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.அன்வர் சாதாhத், பொலிஸ் உத்தியோகத்தர் எச்.எம்.எஸ்.அஹமட் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 இதன்போது பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், தரம் ஒன்றில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

  

  

  

  

  

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி பரிசில்கள் வழங்கி வைப்பு

Read More