சோகத்தில் முழ்கிய வந்தாறுமூலை!

18 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை வந்தாறுமூலையில் சம்பவம்.

விஸ்வலிங்கம், சுலோசனா தம்பதிகளுக்கு குணாலன் (18)என்ற. மகனும், கர்ஷிகா என்ற  (13) மகளும்தான் பிள்ளைகளாவர்.
    தந்தை விஸ்வலிங்கம் டெலிகொம் நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளராகவும், தாய் சுலோசனா மாவடிவேம்பு, விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியையாகவும் தொழில் புரிகின்றனர்.
வழமையாக அண்ணனும், தங்கையும் TV பார்க்கும்போது ஆளுக்கொரு செனல் பார்க்க வேண்டுமென்பதில் சண்டை பிடித்து கொள்வதுண்டு.
(10-01-2017) மாலை 07.30 மணியளவில் அண்ணன், தங்கையான குணாலன், கரிஷீகா ஆகியோர் வீட்டில் TV பார்த்துக்கொண்டிருக்கும் போது தனக்கு விருப்பமான  "செனல் "மாற்றுவதில் சண்டை நடந்ததால் , அப்பா விஸ்வலிங்கம் வந்து, இருவரையும் படிக்கச் சொல்லி கூறிவிட்டு, TV யை Off பண்ணியதும் இருவரும் எழுந்து வெவ்வேறு அறைகளுக்குள் சென்றுவிட்டனர்.
இரவு 08.45 மணியளவில் சாப்பிடுவதற்காக அழைத்த போது, மகன் வராததால், தந்தை அவரது அறையை திறந்த போது அறையின் கூரை மின் விசிறியில் "வேஷ்டி "யினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் உடனடியாக சுருக்கை அவிழ்த்து செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணித்துள்ளார்.

  

  

  வடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.

Read More