மட்டக்களப்பு மேனுஷாவின் இலட்சியம்

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பெரியகல்லாறு மத்தியகல்லூரி மாணவி மேனுஷா கலைப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர் பெரியகல்லாறு விநாயகா வித்தியாலயத்தில் அரம்ப கல்வியை மேற்கொண்டு 5ந்தர புலமைப்பரிசில் பரீட்ளையில் வெற்றிவாகை சூடி, அதன் பின்பு பெரியகல்லாறு மத்தியகல்லூரியில் கல்வி பயின்றார்.

மேனுஷா சாதரண பரீட்சைப் பெறுபேற்றிலும் சாதனை படைத்தவர். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் ஏ சித்தி பெற்றதால் உயர்தரத்தில், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்பதையே ஆசிரியர்களும் , பெற்றோரும் விரும்பினர் ஆனால் அவரின் விருப்பம் சட்டத்துறையை நாடி நின்றது. அதில் அவர் திடமாக இருந்தார்.

தினமும் நள்ளிரவு கடந்து அதிகாலை 2.00 மணிவரை படிப்பு பின்னர் அதிகாலை 5.00 மணிக்கு பிரத்தியேக வகுப்பு. பின்னர் பாடசாலையென அவரின் நேர முகாமைத்துவம் மிகவும் சிறப்பாக பேணப்பட்டு வந்தது. அதவே அவருக்கு இந்த வெற்றியை அளித்துள்ளதாகப் பெருமைப்பட்டனர்.

தனது வெற்றிக்ககு பெற்றோரின் பங்களிப்பு மூலகாரணமாக இருந்ததாக அவர் மகிழ்ச்சி பொங்க நன்றி மேலிட தெரிவித்தார்.

சட்டத்துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் பற்றி அவர் தெரிவிக்கையில், வசதியற்ற ஏழை மக்களுக்காக இலவசமாக வழக்காடுவதே எனது முக்கிய இலட்சியம் என குறிப்பிட்டார்.

கல்லாற்றில் ஓர் பரிஸ்டர் இருந்ததாக ஞாபகம். அந்த இடத்திற்கு இவர் வரவேண்டும் என்று மனம் அங்கலாய்த்தது. வருவார் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டது.)

அத்துடன் பெரியகல்லாற்றில் ஒரேயொரு பெண் சட்டத்தரணி மட்டும் (அக்கா ஜெசிந்தா மட்டும் இருப்பதால்) கிராமத்தில் இன்னும் பல சட்டத்தரணிகள் உருவாக வேண்டும் என்ற உந்துதலே தனது இந்த தெரிவக்கான முக்கிய காரணங்களில் ஒன்றென அவர் இடக்கமாகத் தெரிவித்தார்.

இத்தனைக்கும் இவர் உயர்தரம் கற்கும் காலத்தில் இரு பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ப்பட்டும் அந்த வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்த போதும் பாடசாலை நிர்வாகம் மாற்றீடாக சில ஒழுங்குகளைச் செய்து தந்ததால், (தனிப்பட்ட வகுப்புக்கள்) அதன் மூலம் தான் தன்னை சிறப்பாக பரீட்கைச்குத் தயார் படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர்களையம் நன்றியுடன் நினைவு படுத்தினார்.

மட்டக்களப்பு சகல திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

Read More