டெங்கு காய்ச்சல் காரணமாக நாவட்குடாவைச் சேர்ந்த யுவதி மரணம்

(விஜயரெத்தினம் )
டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாவட்குடாவைச் சேர்ந்த  யுவதி இன்று(12.1.2017) அதிகாலை 3.00 மணியளவில்  மரணமடைந்துள்ளார்.மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த பற்குணம்- சாமினி (23 வயது)எனும் பெண்ணே இன்று அதிகாலை 3.00 மணியளவில் மரணித்துள்ளார்.நேற்று (11.1.2017)புதன்கிழமை   காலை 9.00 மணியளவில் தனது தாயுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று காய்ச்சல் சம்பந்தமாக வைத்தியரிடம் தெரிவித்தார்கள்.சாமினியை பரிசோதித்த வைத்தியர் குழாம்  வைத்தியசாலையில் உள்ள அவசர சிசிச்சைப்பிரிவில்  அனுமதித்தார்கள்.அனுமதிக்கும் போது அதிகமான காய்ச்சல் காய்ந்தது.இவரின் இரத்த மாதிரியை உடனடியாக  பரிசோதனை செய்து பிரச்சனையை கண்டுபிடித்தார்கள்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிசிச்சை பெற்று வந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.இதன் பின்பு மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு குறித்த யுவதி  வருகை தந்தார்.கடுமையான காய்ச்சலை தாங்கிக் கொள்ளாமல் சிசிச்சை பெறுவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றார்கள். நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையிலே இன்று அதிகாலை பெண் உயிரிழந்துள்ளார்.சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றது.நாவட்குடா,கல்லடி, மாமங்கம்,மட்டக்களப்பு நகர்,கூழாவடி,ஊறணி,இருதயபுறம்,போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள்,மாணவர்கள்  போன்றோர்கள்  காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

 

மட்டு- வேப்பவெட்டுவான் மணல் அகழ்வு மற்றும் மரம் வெட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Read More