சிறார்களின் கல்வி மேம்பாட்டில் ஏரூர் அல் ஹஸ்ஸால் அல் அபியத் பவுண்டேசன்.

(ஜெஸ்லான் பின் நிபாத்)

இன்று நம் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் ஓர் சமூக சேவை தொண்டு நிறுவனம் அல் ஹஸ்ஸால் அல் அபியத் பவுண்டேசன்.

ஏரூரில் மட்டும்ல்ல முழு நாட்டிலும் பல பாகங்களிலும் தங்களாலான முயற்சிகளோடு  கைகோர்த்து முஸ்லிம் சமுதாயம் மாத்திரமல்ல அனைத்து சமூகத்திற்கும் உதவிக்கரம் நீட்டக்கூடிய அமைப்பாகவே காணப்பட்டு வருகிறது .கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு ஆனால் மூன்றாமவனாக இருந்து விடாதே என்ற ஹதீஸிற்கு இனங்க இன்று நம் மத்தியில் அதிக சேவைகளை நீட்டி வருகிறது அல் ஹஸ்ஸால் அல் அபியத்

அந்த வகையில் நாடெங்கிலும் வெகு விமர்சையாக இடம்பெற்றுவருகிறது முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள். அதன் பாணியில்  இன்று (11)
 மட்/மமே.பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆரம்ப வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் அல் ஹஸ்ஸால் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கற்றல் உபகரணங்கள் கையளிக்கும்
நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திரு. வ. நல்லதம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.அத்தோடு இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.P. குமாரலிங்கம் ( சேவைக்கால ஆலோசகர், பண்புதர இணைப்பாளர்), ஜனாப் V.T. கபூர் ( தலைவர், அல் ஹஸ்ஸால் அல் அபியத் பவுண்டேசன், ஏறாவூர்) இவர்களோடு

கெளரவ விருந்தினர்களாக திரு. சிவஸ்ரீ வ. மதனராஜ் ( ஆலய பூசகர், பன்குடாவெளி), திரு. செள.சுமன் ( தலைவர், விவேகானந்தா சனசமூக நிலையம்,பன்குடாவெளி) ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது எமது அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் மாணவச் செல்வங்களிடம் கையளிகக்கப்பட்டது. மேலும் எமது சகோதர இன நண்பர்களினால் பெரும் வரவேற்பும் நல்லபிப்ராயமும் ஏழைகள் ,ஏழைச் சிறார்கள் எங்கு உள்ளார்களோ அங்கு அல் ஹஸ்ஸாலும் முதலாவதாக தமது சேவையை வழங்க நிற்கும் எனவும் அனைவராலும் எம் முன்னிலையில் தமது கருத்துக்கள் மூலம் பகிர்நது கொண்டார்கள்.

அதே போன்று இந் நிகழ்வு இடம் பெற்று முடிய திடீர் அழைப்பின் பேரில் மட்/மமே. தளவாய் சுவாமி அஜராத்மானந்தாஜீ வித்தியாலய ஆரம்ப வகுப்பு  மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் அல் ஹஸ்ஸால் அமைப்பின் முயற்சியால் கற்றல் உபகரணம் கையளிக்கும் நிகழ்வும் சிறப்பாய் இடம்பெற்றது.

ஊரில், மாவட்டத்தில், மாகாணத்தில், நாட்டில் எங்கு என்ன நடந்தாலும் அழ்ழாஹ்வின் உதவியால் துயர் துடைக்க எந்நேரமும் மக்களின் பங்குபற்றலோடு சேவையத்தொடர்ந்து வரும்,  தொடர இருக்கும் ஏரூர்  ஹஸ்ஸாலே ஏறாவூர் சார்பாக உங்கள் சேவை என்றும் எமக்குத் தேவை என கேட்டு எல்லாம் வள்ள இறைவனிடத்தில் பிரார்த்தித்து உங்களால் இன்று பயனடைந்து மாணவர்கள் சார்பிலும் பாடசாலை நிருவாகம் சார்பிலும் பங்குடாவெளி சமூகம் சார்பிலும் மேலான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  

  

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு சம்பவம்

Read More