மண்டூர் பாலமுனை அ.த.க பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(மண்டூர் நிலா) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் பாலமுனை அ.த.க பாடசாலையில பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த புதன் (11)  அதிபர் ச.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற விவசாய போதனாசிரியர் திருமதி மலர் சிவராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார். புதிதாக முதலாம் தரத்திற்கு இணைக்கப்படவுள்ள மாணவர்கள் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டதுடன் இன் நிகழ்வில் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது: செயிட் அல் ஹுசைன்

Read More