தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும�

முப்பது வருடமாக தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிக்கொண்டு இருக்கின்றோம் அந்த விடுதலை கிடைக்கும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்
 கடந்தகாலங்களில்  மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கம் தமிழ்மக்களை ஏமாற்றிவந்துள்ளார்களே தவிர தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
2017 ஆண்டுக்கு தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் நாவிதன்வெளிக்கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து கிராம அபிவிரத்திச்சங்கத்தின் தலைவர் யோகராசா வேப்பையடிபிள்ளையார் ஆலயத்தின் தலைவர் ஆசிரியர் மா.தருமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர்மேலும் பேசுகையில் கடந் ஆட்சியில் இருந்த அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வு விடயத்திலே கரிசனைகாட்டவில்லை தமிழ்மக்களை கொடுமைப்படுத்தியமையால் ஆட்சியினை மாற்றி நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியமைத்தும் இன்னும் நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காமல் இருப்பது வேதனையான விடயமாகு
தமிழ் மக்கள்  புதிய அரசியல் அமைப்பினூடாக வடகிழக்கு இணைந்த புதிய அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம் இத்தீர்வினைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அவதானமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது

வடகிழக்குப் பிரதெசங்களில் ஆய்வொன்று செய்யப்பட்டு இருக்கின்றது அந்த ஆய்வின் அடிப்படையில் இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் வடகிழக்குப் பிரதேசத்தில் கல்வியின் அடைவ உச்சநிலையில் இருந்ததாகவும் அது இன்று பின்தள்ளப்பட்டு இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது  .இந்தநிலையினை மாற்றி எமது சமூகத்தின் கல்வியினை முன்னேற்றவெண்டும் அதற்காக நாம் அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும்

 

அம்பாரைமாவட்டத் தமிழ்பிரதேசங்கள் பலவழிகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றது அதாவது அத்துமீறிய குடியேற்றம் தொழில் வழங்கும் விடயங்கள் வளப் பகீர்வுகள் போன்ற விடயத்தில் புறக்கணிக்கப்பட்டவண்ணம் உள்ளோம் இந்நிலை இடம்பெறக்கூடாது கடந்தகாலங்களில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழர்கள் இன்று நல்லாட்சி அரசாங்கம் மலர்ந்துள்ளபோதும் மீண்டும் தமிழர்கள் பாதிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்
அம்பாரைமாவட்டத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல தமிழ்க் கிராமங்களில் பாடசாலைகளுக்கான கட்டிடம் கூட இல்லை  அதுபோன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இருக்கின்றது .அம்மக்கள் தற்காலிகமாவே சில பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளின் கல்வி போதிக்கப்படகிறது இவ்வாறு பல புறக்கணிப்பக்கள் இடம்பெறுகின்றது
இன்று நடைபெறுகின்ற தரம் 1 மாணவர்களை வரவேற்கும் இந்நிகழ்வு இந்தநாட்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது இது ஒரு வரலாற்று நிகழ்வாகவே எம்மால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது இன்றைய நாள் எமது மாணவர்களால் எப்போதும் மறக்கமுடியாத நாளாகவே இருக்கும் அதேவேளை மாணவர்களின் எதிர்காலத்தினை சுபீர்ச்சமாக்குவதாகவும் அமைந்துவிடும் இந்த நாவிதன்வெளிப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் முப்பதுவருடயுத்தத்தில் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்னடைவு கண்டு இருந்தது இன்று ஒரளவுக்கு மாற்றம் கண்டு இப்பகுதியில் பல்துறைசார்ந்தோர் உருவாகி இருப்பதுடன் பொறியியல் வர்த்தகம் கலைபோன்ற துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர் அதற்காக அப்பாடசாலைகளின் அதிபர் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்

கல்முனை சாய்ந்தமருது பாடசாலையில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட ஆசிரியர்கள்!

Read More